ரோகித்தை தூக்கியதே இதனால் தான் - மும்பை அணி கொடுத்த புது ட்விஸ்ட்..! ஷாக்கில் ரசிகர்கள்..!
இந்த ஆண்டு ஐபில் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது.
ரோகித் - மும்பை இந்தியன்ஸ்
5 முறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை அணியை அசுரத்தனமாக மாற்றியது ரோகித் ஷர்மா தான். அவரின் தலைமையில் தான் அந்த அணி அனைத்து கோப்பைகளையும் வென்றது.
இந்த ஆண்ட ஐபில் சீசன் ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள நிலையில், ரோகித் ஷர்மாவை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என மும்பை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்து.
MI அணியின் ட்விஸ்ட்
இந்த கருத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த ஆண்டின் தொடரில் ரோகித் ஷர்மாவை Impact Player'ஆக களமிறக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில் மற்றொரு புறம் அடுத்த ஆண்டு IPL தொடரின் Mega Auction நடைபெறவுள்ளது. இதில் 4 வீரரை மட்டுமே ஒரு அணி தக்கவைத்து கொள்ளும் என்பதால், 37 வயதாகும் ரோகித் ஷர்மாவை மும்பை அணி அப்போது கழட்டிவிட போவதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.