தோனியின் 12 வருட மாபெரும் சாதனை..அசால்ட்டாக நிகழ்த்திய ரோகித்..!
தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
ரோகித் சாதனை
இந்தியா அணி கேப்டன்களில் தற்போது டோனியின் பல சாதனைகள் உடைக்கமுடியாமலே உள்ளது. அதில் முக்கியத்துவம் வாய்த்த ஒன்றாக இருப்பது தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
2011-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தோனி தலைமையிலான இந்தியா அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி தலைமையில் இந்தியா அணி 2 தொடர்களில் விளையாடியும் அப்போது தோல்வியையே பெற்றுள்ளது.
இந்நிலையில், தான் 12 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி நேற்று வெற்றி பெற்று 12 வருட தோனி சாதனையை சமன் செய்துள்ளது.
டெஸ்ட் சமன்
முன்னதாக, முதல் போட்டியில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்தியா அணி கடைசி போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முன்னைப்பில் களமிறங்கினர். இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்த இந்திய அணி.
தனது முதல் இன்னிங்க்ஸில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுக்க இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த டார்கெட்டை 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.