ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை மீது எனக்கு உடன்பாடு இல்லை - ஹர்திக் பரபரப்பு பேச்சு!

Hardik Pandya Mumbai Indians Rajasthan Royals IPL 2024
By Swetha Apr 23, 2024 07:00 AM GMT
Report

 ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை மீது எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உடன்பாடு இல்லை

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 179 ரன்களை நிர்ணயித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 183 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை மீது எனக்கு உடன்பாடு இல்லை - ஹர்திக் பரபரப்பு பேச்சு! | Mumbai Indians Captain Hardik Panya Lost His Cool

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாவது போட்டியை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதனையடுத்து தோல்வி தழுவிய பிறகு செய்தியாளர்களிடம் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசினார்.

அப்போது அவர், ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம்.

ஹர்திக் பாண்டியாவிற்காக இப்படியா ? அம்பானி போட்ட ஸ்கெட்ச் - காலியான 3 Team

ஹர்திக் பாண்டியாவிற்காக இப்படியா ? அம்பானி போட்ட ஸ்கெட்ச் - காலியான 3 Team

 ஹர்திக் பரபரப்பு பேச்சு

இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை.

ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை மீது எனக்கு உடன்பாடு இல்லை - ஹர்திக் பரபரப்பு பேச்சு! | Mumbai Indians Captain Hardik Panya Lost His Cool

எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும். நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது.அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும்.

எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகின்றோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.