என் மேல் நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி: அர்ஜூன் டெண்டுல்கர்
தன் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி என அர்ஜூன் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 சீசனுக்கான மினி ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலமெடுத்தது.
இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூனுக்கு அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும். அவரது பெயர் வாசிக்கப்பட்ட போது ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணி கேட்டது. வேறு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வராத காரணத்தால்.அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணிக்கு தேர்வானார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பதிவில் அர்ஜூன் பேசிய வீடியோவை வெளியிட்டது அதில் சிறு வயதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன் தான் என்று கூறியுள்ளார். மேலும், தன் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
"I would like to thank the coaches, owners and the support staff for showing faith in me." ??
— Mumbai Indians (@mipaltan) February 18, 2021
Arjun Tendulkar shares his thoughts on joining MI ?#OneFamily #MumbaiIndians #IPLAuction pic.twitter.com/fEbF6Q1yUF
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil
தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள் IBC Tamil