Thursday, Jul 17, 2025

ஹர்திக் பாண்டியாவை ரூ.100 கோடிக்கு வாங்கியதா மும்பை அணி? வெளியான பரபரப்பு தகவல்

Hardik Pandya Gujarat Titans Mumbai Indians IPL 2024
By Sumathi 2 years ago
Report

 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அம்பானி குடும்பத்தினர் குஜராத் அணிக்கு ரூ.100 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வீரர்களின் வர்த்தகமானது சூடுபிடிக்கத்தொடங்கியது. ஒவ்வொரு அணியும் தேவையான வீரர்களை போட்டு போட்டுக்கொண்டு வாங்கிய நிலையில்,

hardik pandya

மும்பை அணி மட்டுமே அடுத்த கேப்டனுக்கான தேடலில் குஜராத் அணியுடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடி விலை கொடுத்து வாங்கியதாக கூறப்பட்டது.

படையப்பா ரஜினி ஸ்டைலில்... மாஸா புகைப்படம் வெளியிட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் புகைப்படம்...!

படையப்பா ரஜினி ஸ்டைலில்... மாஸா புகைப்படம் வெளியிட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் புகைப்படம்...!

அதேபோல் அவரை மும்பை அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப்பக்கங்களை மும்பை ரசிகர்கள் வேகமாக அன் ஃபாலோ செய்தனர்.

சமீபத்தில் ஹர்திக் பாண்டியா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம்?

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடி ஒப்பந்தம் போக, நிர்வாகங்களுக்கு இடையில் ரூ.100 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ipl 2024

எனவே, ஐபிஎல் நிர்வாகம் அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணி வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே உண்மையான தொகை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.