ஆடி காரில் வந்து டீக்கடை போட்ட வாலிபர்கள் - வைரலாகும் வீடியோ!
மும்பையில் ஆடி காரில் வந்த இளைஞர்கள் டீக்கடை வைத்து நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
வாலிபர்கள்
மும்பையில், சொகுசு காரான ஆடி காரில் வந்த வாலிபர்கள் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை அமைக்கப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
வைரல் வீடியோ
இதனை தொடர்ந்து, அந்த வீடியோவில் அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆடி காரை நிறுத்தி இருந்தனர்.
பின்னர் கார் டிக்கியை திறந்து தங்கள் ஸ்டாலை திறந்து டீ வியாபாரம் செய்வதை காண முடிந்தது.
இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.