இருமல் சிரப் குடித்த 2 வயது குழந்தை.. நின்றுபோன இதயம் - பகீர்!
2 வயது குழந்தையின் இதயம் இருமல் சிரப் குடித்தபின் நின்றுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருமல் சிரப்
மும்பையைச் சேர்ந்தவர் மேலாண்மை நிபுணர்(மருத்துவர்) திலு மங்கேஷ்கர். இவரது இரண்டரை வயது பேரன் இருமல் மற்றும் சளியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவனது தாய் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் இருமல் மருந்தைக் கொடுத்துள்ளார். தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது.

உடனே குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு இதய நுரையீரல் புத்துயிர் (CPR) கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் குழந்தை கண்களைத் திறக்க வைக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்க வைக்கவும் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துள்ளது.
அபாயம்
அந்த மருந்தில் குளோர்பெனிரமைன் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கலவைகள் கலந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க எஃப்.டி.ஏ தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மருந்தில் அத்தகைய லேபிள் எதுவும் இல்லை.
மேலும் மருத்துவர்கள் அதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருமல் சிரப் தேவையில்லை. உதாரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் ஆகியவை சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தப்படலாம்.
சில இருமல் சிரப்களை இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தும் புதிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.