தொண்டை கரகரப்பு, சளியால் பெரும் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்... இதோ வழி...

கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தவர்கள் பல்வேறு பணிகளின் காரணமாக மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கிறோம். வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் லேசாக தொண்டை கரகரப்பு இருந்தாலே பயத்தில் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்து விடும். இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும்... தொண்டை கரகரப்பும், சளியும் உடனே சரியாகிவிடும்.

பால் மற்றும் மஞ்சள்

பசும் பாலை நன்றாக கொதிக்க வைத்து சிறிதளவு சுண்டிய நிலையில்‌ நன்றாக ஆர விட்டு சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து மஞ்சள் கலந்த பாலை மிதமான சூட்டில் காலையிலும் இரவிலும் பருகி வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெஞ்சு சளி விரைவில் நீங்கும். வெந்நீர் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.


ஆளிவிதை

ஆளிவிதைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் சிறிது எலுமிச்சை சாரையும், தேனையும் சேர்த்து பருகி வந்தால், சளி இருமல் (cough cold) காணாமல் போய்விடும்.

எலுமிச்சை, பட்டை, தேன்

அரைத் தேக்கரண்டி தேனில், கொஞ்சம் எலுமிச்சை சாறு, சிறிது பட்டைத்தூள் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் தாங்காது.

மிளகு

சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலே நல்ல குணமாகிவிடும். சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத் தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வைத்துக்கொண்டு, தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வர சளி சரியாகிவிடும்.

சுக்கு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி, அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். சிற்றரத்தை தினமும் ஒரு துண்டு சிற்றரத்தையை வாயில் போட்டு வந்தால், இருமல் போய் விடும். கற்பூரம் நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.      

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்