ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு மோசமான உடல்நிலை - மருத்துவமனையில் அனுமதி
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கன் ஷவர்மா
மும்பை, கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் ஷவர்மா கடைகள் அமைந்துள்ளது. அங்கு சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனே இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட அனைவரும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாகவும், அந்த உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உடல்நிலை பாதிப்பு
12 பேரில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர்கள் ஓட்டலில் சாப்பிட்டார்களா அல்லது தெருவோர கடையில் சாப்பிட்டார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.