இந்தியாவில் முதல்முறை; சென்னை விமானநிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்!
சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார் பார்க்கிங் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து, முன்கூட்டியேவிமானத்திற்காக வந்து காத்திருக்கும் பயணிகள்,
விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்கு அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மல்டிபிளக்ஸ்
மேலும் நடன நிகழ்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டு காட்சிபடுத்தப்பட்டன. ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.
மேலும் கட்டிமுடிக்கப்படுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவை கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளன.