முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - மேடையில் டென்ஷனாகி மைக்கை தூக்கி அடித்த திருமா!

Thol. Thirumavalavan
By Sumathi May 19, 2023 04:47 AM GMT
Report

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருமாவளவன்

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார். இதில், ஈழப் போரில் உயிர் மாண்ட பொதுமக்கள், படங்களுக்கு நினைவு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - மேடையில் டென்ஷனாகி மைக்கை தூக்கி அடித்த திருமா! | Mullivaikkal Remembrance Day Thirumavalavan

அதன் பின் பேச முயற்சித்த அவர் மைக் சரியாக வேலை செய்யாததால் அதனை தூக்கி எறிந்தார். தொடர்ந்து, கலைஞர் ஆட்சியில் இருந்தபோதே அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ், நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து பயணப்பட்டவன் நான்.

தமிழ் ஈழம் வெல்லும்

இதனை யாரும் பாராட்டமாட்டார்கள். இது ஒரு மாறுபட்ட அணுகுமுறை. இந்த துணிச்சலை யாரும் அங்கீகரிக்கமாட்டார்கள். இது சாதாரணமாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை. தீர்க்கமாக, உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு. தமிழீழ விடுதலையை ஆதரிப்பது இனவாதத்தை ஆதரிப்பது அல்ல.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - மேடையில் டென்ஷனாகி மைக்கை தூக்கி அடித்த திருமா! | Mullivaikkal Remembrance Day Thirumavalavan

ஒரு சிறுபான்மையை பெரும்பான்மை ஒடுக்கும்போது அதனை எதிர்ப்பது ஒரு ஜனநாயக சக்தியின் கடமை. அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது.

புரட்சியாளர்கள் நடமாடிய மண்ணில் சனாதன சங்கிகள் நடமாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து பேசுவோம். அதன் அரசியலை அடைகாப்போம், போராட்டத்தை முன்னெடுப்போம், தமிழ் ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் எனப் பேசினார்.