முகுந்த் மனைவியின் கோரிக்கை..ராணுவ வீரரிடம் அதை பார்க்க முடியாது - அமரன் இயக்குநர்!
ராணுவ வீரர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என பார்த்துக் கொண்டிருக்க முடியாது என ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் அமரன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது, இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது,
ராணுவ வீரர்
முகுந்த் வரதராஜனின் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முகுந்த் தன்னை ஒரு தமிழன் என்று பெருமை கொள்வார். இந்தத் திரைப்படத்தில் முகுந்த் ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதேபோல், முகுந்த் வரதராஜன் அவரது தாய், தந்தையர் முகுந்த் வரதராஜன் தன்னை ஒரு இந்தியனாக மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ள நினைத்தார் என கூறினார்கள். ஒரு ராணுவ வீரனை நினைவு கூற எடுத்த திரைப்படம்.
இந்தத் திரைப்படத்திற்காக அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அசோக சக்ரா விருது பெற்ற, அவர் ஆற்றிய அந்த சிறப்பான பணிக்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் விதமாக அமரன் திரைப்படம் இருக்கும். என்று தெரிவித்துள்ளார்.