Tuesday, May 27, 2025

உடல் ரீதியாக பிரச்சனை.. உருக்கமாக பேசிய மகன் - கதறி அழுத முகேஷ் அம்பானி!

India Mukesh Dhirubhai Ambani Marriage
By Jiyath a year ago
Report

தனது மகனின் உருக்கமான பேச்சை கேட்டு முகேஷ் அம்பானி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

உடல் ரீதியாக பிரச்சனை.. உருக்கமாக பேசிய மகன் - கதறி அழுத முகேஷ் அம்பானி! | Mukesh Ambani In Tears As Anant Speaks

இவர்களின் திருமணத்தை ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்த அம்பானி ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்காக அங்கு உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர். இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார்.

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா: பில் கேட்ஸ் முதல் தோனி வரை - குவிந்த பிரபலங்கள்!

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா: பில் கேட்ஸ் முதல் தோனி வரை - குவிந்த பிரபலங்கள்!

உருக்கம்

அவர் கூறியதாவது "தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன்.

உடல் ரீதியாக பிரச்சனை.. உருக்கமாக பேசிய மகன் - கதறி அழுத முகேஷ் அம்பானி! | Mukesh Ambani In Tears As Anant Speaks

சிறுவயதிலிருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் தன்னை விடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள்" என உருக்கமாக பேசினார்.

இதைக் கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.