காலி பண்ண ஒரு ஸ்னைப்பர் போதும்.. ரூ.400 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

Reliance Mukesh Dhirubhai Ambani
By Vinothini Oct 31, 2023 07:33 AM GMT
Report

ரூ 400 கோடி கேட்டு அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இவர் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவர். இந்த மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் அம்பானி முதல் இடம் பெற்றுள்ளார். கவுதம் அதானி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

mukesh-ambani-got-threatening-mail

தற்பொழுது அம்பானிக்கு மின் அஞ்சல் மூலமாக அடையாளம் தெரியாத நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மும்பை போலீஸார், க்ரைம் பிராஞ்ச் போலீஸார் மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சியில் தொழில் வட்டாரங்கள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சியில் தொழில் வட்டாரங்கள்

வழக்கு

இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வந்த முதல் மிரட்டல் மின்னஞ்சலில் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. காம்தேவி காவல் நிலையத்தில் அம்பானி வீட்டு பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

mukesh ambani

தொடர்ந்து சனிக்கிழமை ரூ.200 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) ரூ.400 கோடி கேட்டு 3-வது மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. தற்போது இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு பிஹாரின் தார்பங்கா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொலைபேசி வழியாக கொலை மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.