ஆசியாவிலேயே டாப் பணக்காரர்கள் இவர்கள் தான் - முதல் இடத்தில் இவரா?
ஆசியாவின் டாப் பணக்காரர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
டாப் பணக்காரர்கள்
ஆசியா மட்டுமின்றி உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலிலும் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் டாப் இடங்களில் உள்ளனர்.
இருவரும் ஏற்கனவே பலமுறை ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் இருவரும் ஆசியாவின் பணக்காரர்கள் டாப் இடத்தில் உள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி 91.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
முதல் 3 இடங்கள்
இதில் சில மாதங்களுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்த அதானி இப்போது மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 52.3 பில்லியன் டாலராக இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன்(68) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவரது நிகர மதிப்பு 64.2 பில்லியன் அமெரிக்க டாலர். இவர் தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன், கட்டிடத் தொழிலாளியாகச் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார்.
பிறகு செய்தித்தாள் நிருபராக பணியாற்றிய இவர், சிறிது காலம் மதுபான விற்பனை முகவராகவும் வேலை செய்துள்ளார். அதன் பிறகு பிஸ்னஸ்களை ஆரம்பித்த இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.