ஜூபைருக்கு மத நல்லிணக்க விருது; ஏன்? தமிழக அரசு விளக்கம்!

M K Stalin Tamil nadu
By Sumathi Jan 27, 2024 05:50 AM GMT
Report

முகமது ஜூபைருக்கு பதக்கம் அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மத நல்லிணக்க விருது

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு 2024-ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் கோட்டை அமீர்.

muhammad-zubair

இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார். 1994ல், அவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் பெயரில், ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுவது வழக்கம்.

கடலுக்கு நடுவில்  கருணாநிதி நினைவு சின்னம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கடலுக்கு நடுவில் கருணாநிதி நினைவு சின்னம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அரசு விளக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டு முகமது ஜுபைர் விருதைப் பெற்றுள்ளார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய இவர், சக ஊழியர் பிரதிக் சின்ஹா-வுடன் இணைந்து, உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான ​​Alt News நிறுவனத்தை உருவாக்கி போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடினர்.

ஜூபைருக்கு மத நல்லிணக்க விருது; ஏன்? தமிழக அரசு விளக்கம்! | Muhammad Zubairmadha Award Tamil Nadu Govt Explain

இதற்கிடையில், சர்ச்சைக் கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா விவகாரத்தில், பாஜகவால் 2022ல் கைது செய்யப்பட்டு 1 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை முடிவில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பதக்கம் அளித்தது குறித்து விளக்கமளித்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அப்போது, அந்தத் தாக்குதல் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழவில்லையென தனது இணையதளத்தில் ஆதாரங்களுடன் ஜூபைர் செய்தி வெளியிட்டிருந்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் ஜாதி, மத, மொழி பேதத்தால் வன்முறைகள் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்காக, வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.