நண்பனை மறக்காத தோனி; பேட் ஸ்டிக்கரை கவனிச்சீங்களா..? - வைரலாகும் புகைப்படம்!

MS Dhoni Cricket Sports IPL 2024
By Jiyath Feb 08, 2024 10:19 AM GMT
Report

பேட்டிங் பயிற்சியின்போது தோனியின் பேட்டில் ஒட்டப்பட்டிருந்த 'ப்ரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

எம்எஸ் தோனி 

ஐபிஎல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நண்பனை மறக்காத தோனி; பேட் ஸ்டிக்கரை கவனிச்சீங்களா..? - வைரலாகும் புகைப்படம்! | Ms Dhonis New Bat Sticker Goes Viral

இந்நிலையில் பயிற்சியின்போது தோனியின் பேட்டில் ஒட்டப்பட்டிருந்த 'ப்ரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. பிரைம் ஸ்போர்ட்ஸ் என்பது தோனியின் பழைய நண்பர் பரம்ஜித் சிங் என்பவரின் கடை ஆகும்.

சிறந்த கேப்டன் யார்..? - யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி ஷாக் கொடுத்த ஷமி!

சிறந்த கேப்டன் யார்..? - யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி ஷாக் கொடுத்த ஷமி!

நண்பர்கள் 

ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டுக் கொண்டிருந்த தோனிக்கு, அவரின் நண்பர்கள் பெரிதும் உதவியுள்ளனர். கிரிக்கெட் கிட்களை அவரின் நண்பர்கள்தான் முதன்முதலில் ஸ்பான்சர் பிடித்து கொடுத்தனர்.

நண்பனை மறக்காத தோனி; பேட் ஸ்டிக்கரை கவனிச்சீங்களா..? - வைரலாகும் புகைப்படம்! | Ms Dhonis New Bat Sticker Goes Viral

இது தோனியின் பயோபிக் படமான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தில் கூட இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தனது நண்பன் நிறுவனத்தின் பேட்டையே தற்போதும் தோனி பயன்படுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அவர்களின் ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டை தோனி பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.