தோனிக்கு 'நம்பர் 7' ஏன் மிக முக்கியம் தெரியுமா..? - அவரே கூலாக சொன்ன பதில் இதுதான்!

MS Dhoni Cricket India Indian Cricket Team Sports
By Jiyath Feb 11, 2024 11:50 AM GMT
Report

நம்பர் 7 ஏன் தனக்கு முக்கியம் என்பது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியுள்ளார். 

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

தோனிக்கு

கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, நம்பர் 7 ஏன் தனக்கு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான அந்த தொடரை அழித்து விடுங்கள் - மனோஜ் திவாரி வேதனை!

இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான அந்த தொடரை அழித்து விடுங்கள் - மனோஜ் திவாரி வேதனை!

ஏன் முக்கியம்..?

அவர் பேசியதாவது "நான் உலகிற்கு வருவேன் என பெற்றோர் முடிவு செய்த நாள்தான் 7. ஜூலை 7ம் தேதி பிறந்தேன். ஜூலை ஆண்டின் 7வது மாதமும் கூட. அதனால் வெளியில் எந்த எண் வேண்டும் என யாராவது கேட்டால் 7 என சொல்வது எளிதாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

தோனிக்கு

இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகளை கவுரவிக்கும் நோக்கில், அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் பயன்படுத்திய ஜெர்சி எண் 7-க்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.