தோனி ராமர் கோவிலுக்கு போகல.. ஆனால் மனைவி செய்த செயலை பாருங்க..
தோனியின் மனைவி பகிர்ந்துள்ள ரீல்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.
ராமர் கோயில் திறப்பு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையில் இந்த திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிரிக்கெட் வீரர் தோனிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
வைரல் போஸ்ட்
அதனால், பலர் தோனிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கவனம் பெற்று வருகிறது. அவர் ராமர் கோவிலில் நிறுவப்பட்ட சிலையின் புகைப்படம் ஒன்றை அதில் வெளியிட்டு இருந்தார்.
இதன்மூலம், அவர் எதிர்ப்பை சமாளித்து வருகிறார். தோனியைப் போலவே ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அழைப்பு கிடைத்தும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.