இதோ தோனி சொன்ன சூசகம் - ஓபன் செய்யப்பட்ட சஸ்பென்ஸ்!
இன்று சமூக வலைதளங்களில் நேரலையில் வந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தோனி
இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை தோனி பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கின.

ஏற்கனவே அவர் திரைப்படம் தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அதனால், திரைப்படம் சம்மந்தப்பட்ட அறிவிப்பாக இருக்குமா என எதிர்பார்ப்புகளும் கிளம்பிய வண்னம் இருந்தது.
இந்தியா உலக கோப்பை?
இந்நிலையில், இன்று நேரலை வந்த தோனி ஓரியோ பிஸ்கட்டுகளை ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்தார். அதில் ஒருவர், ஓரியோ தான் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதே என கேட்டார்.
அதற்கு பதிலளித்த தோனி, “2011ல் ஓரியோ அறிமுகமானது. அப்போது இந்தியா உலக கோப்பையை வென்றது. அதேபோல், இந்தாண்டு ஓரியோவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அப்போ?” என கேள்வியுடன் முடித்தார்.
அதற்கு இந்தாண்டு இந்தியா உலக கோப்பையை வெல்லும் என மற்றொருவர் பதிலளித்தார். இதனையடுத்து பேசிய தோனி, To create history, we have to recreate history, வரலாற்றை உருவாக்க, அதை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.