அச்சச்சோ இப்படி ஒரு பிரச்சனையா? இக்கட்டான சூழ்நிலை - அணிக்காக துணிந்த தோனி!
தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணி சூழ்நிலை
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த லீக் மேட்சான பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கான போட்டியில் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினார். இதற்காக பலரும் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு உண்மையான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் இடம் கொடுத்து விட்டு வெறும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டும் இடம் பெற்று ஆடி வருகிறார்.
இந்த நிலையில், தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவருக்கு அந்த இடத்தில் தசைநார் கிழிசல் இருந்தது. இந்த நிலமையோடு தான் அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.
துணிந்த தோனி
அவரால் முழு தொடரிலும் ஆட முடியாது என்பதால் அவர் தந்து பதவியை விட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார் தோனி. இதை தொடர்ந்து, அவ்வப்போது அணி படுமோசமான விளையாட்டை வெளிப்படுத்தும் போதும் அவர் இப்படி கடைசி ஓவர்களில் மட்டும் ஆடுவது மிக பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆனால், முதல் சில போட்டிகளில் அவர் ரன் ஓடும்போது அவரது தசைநார் கிழிசல் மேலும் பெரிதாகி விட்டதாகவும் அதனாலேயே அதன் பின் அவர் சிங்கிள் ரன்கள் ஓடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இடையே மருத்துவர்கள் அவரை ஓய்வு பெறுமாறு கூறி இருக்கின்றனர்.
ஆனால் சிஎஸ்கே அணியில் சரியான மாற்று விக்கெட் கீப்பர் இல்லை என்பதால் தொடர்ந்து வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக அணியின் வீரர்கள் காயத்தாலும், சரியான ஃபார்ம் இல்லாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் நிலை கருதியே தோனி போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அவரால் அதிக ஓவர்கள் நின்று பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும் கூட தனது அனுபவத்தை பயன்படுத்தி சிஎஸ்கே அணியை முடிந்த வரை ஆலோசனை கூறி வழிநடத்துவதாகவும் அணியின் வெற்றிக்காக பங்காற்றி வருகிறார். அதற்காகவே கடும் வலியுடன் அவர் விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது.