தேர்தலில் களமிறங்கும்மகேந்திர சிங் தோனி - வெளியான அறிவிப்பு!

India
By Vidhya Senthil Oct 27, 2024 09:27 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக (விளம்பர தூதர் )நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் நாற்பத்து மூன்று தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

ms dhoni

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் நேற்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி கே. ரவி குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிராண்ட் அம்பாசிடராக (விளம்பர தூதர் ) தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

'பிறந்தநாள் பரிசுக்கு நன்றி' - இந்திய அணி வென்றதும் தோனி செய்த செயல்!

'பிறந்தநாள் பரிசுக்கு நன்றி' - இந்திய அணி வென்றதும் தோனி செய்த செயல்!

இந்த நடவடிக்கை வாக்காளர்களை வாக்களிக்க ஆர்வப்படுத்தும் விளம்பர படங்களில் தோனியின் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் கூறினார்.மேலும் தனது புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு தோனி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி கே. ரவிக்குமார் தெரிவித்தார்.

தேர்தல்

அந்த வகையில் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரையில் தோனியும் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பாக வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கச்செய்யும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

dhoni pic

தேர்தல் ஆணையத்தில் இந்த அறிவிப்பால் தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தோனி உறுதி செய்துள்ளார். தொடர்ந்து தனது உடல் நலத்தை ஃபிட்டாக பராமரித்து வரும் தோனி, இன்னும் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது