டி20 வரலாற்றில் முதல் வீரர் - எம்.எஸ்.தோனி படைத்த மாபெரும் சாதனை!
டி20 வரலாற்றில் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை எம்.எஸ்.தோனி படைத்துள்ளார்.
சென்னை - டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கடந்த 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி சாதனை
இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி பேட்டிங் செய்தபோது பிரித்வி ஷா அடித்த பந்தை எம்.எஸ். தோனி கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 வரலாற்றில் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை எம்.எஸ். தோனி படைத்துள்ளார்.
இந்த பட்டியில் எம்.எஸ்.தோனி - 300 விக்கெட்டுகள், கம்ரான் அக்மல்/தினேஷ் கார்த்திக் - 274 விக்கெட்டுகள், டி காக் - 270 விக்கெட்டுகள், பட்லர் - 209 விக்கெட்டுகள் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.