அது மாதிரி படங்களில் தான் நிறைய நடிக்கணும் - விபரீத ஆசையில் மிருணாள் தாகூர்..!
தென்னிந்தியாவில் தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர்
ஹிந்தி தொலைக்காட்சி நடித்து பெரும் பிரபலமடைந்த மிருணாள் தாகூர், அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனாலும், அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

அப்போது தான் தெலுங்கு இயக்குனர் ஹனு ராகுவுப்பிடு இயக்கத்தில் அவர் நடித்த "சீதா ராமம்" படம் பெரும் ஹிட் படமானது. படத்தின் வெற்றியின் மூலம் தென்னிந்திய திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார் மிருணாள் தாகூர்.
அதனை தொடர்ந்து நானியுடன் அண்மையில் வெளியான மிருணாள் தாகூரின் "ஹை நானா" படமும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
அது மாதிரி
இருப்பினும் பாலிவுட்டில் மிருணாள் தாகூர் எதிர்பார்க்கும் வெற்றி படங்கள் அமையவில்லை. இந்த சூழலில், விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், எப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மிருணாள் தாகூர், பாலிவுட் தனக்கு காதல் திரைப்படங்கள் வருவதில்லை என்று கூறி, காதல் கதைக்களங்களில் பாலிவுட்டில் நடிக்க விருப்பமிருப்பதாக தெரிவித்தார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil