வெக்கமா இல்லையா உங்களுக்கு...எல்லாத்தையும் zoom பண்ணி பாக்குறீங்க!! மிருணாள் தாகூர் ஆவேசம்!!
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நடிகை மிருணாள் தாகூர் தனது தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஷ்மிகா விவகாரம்
நேற்றைய தினம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மோசமான வீடியோ ஒன்று வைரலானது. அது DeepFake என்ற Technology'யின் மூலம் உருவாக்கப்பட்டது என பிறகு தெரிந்தபோது பெரும் எதிர்ப்புகளை பெற்றது. பல்வேறு நட்சத்திரங்களுக்கும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று இதில், மத்திய அமைச்சராகம் சார்பில் கடும் எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் இது போன்ற DeepFake வீடியோக்கள் உருவாக்கப்பட்டால், அதனை செய்பவர்களுக்கு 3 ஆன்டுகள் சிறை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளது.
மிருணாள் தாகூர்
பல திரை துறை நட்சத்திரங்களும் பிரபல நடிகை மிருணாள் தாகூரும் தனது கருத்தை சமூகவலைத்தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் நிச்சயமாக வெட்கப்பட வேண்டும் என்று சாடி, இது அவர்களுக்கு மனசாட்சி இல்லை என்பதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா இதனை பொதுவெளியில் பேசியதற்காக நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாளும் பெண் நடிகர்களை ஆபாசமாக சித்தரித்து, அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, வீடியோக்களை எடிட் செய்து அதனை இணையத்தில் உலாவ விடுகிறார்கள் என்று வளர்த்தம் தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிய மிருணாள் தாகூர், நாங்கள் நடிகைகளாக இருப்பதால் எங்கள் மீது அதிக வெளிச்சம் விழுகிறது என்றும் ஆனால் இறுதியில் நாங்களும் மனிதர்கள்தான் என குறிப்பிட்டு, நாம் ஏன் இதை பற்றி பேச தயங்குகிறோம். அமைதியாக இருக்க வேண்டாம் ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார்.