அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர்...ஒரே ஒரு சிக்கல் - என்ன தெரியுமா?
அதிபர் தேர்தலில் பிரபல யூடியூபர் ஒருவர் போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதற்காக இருவரும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், அமெரிக்காவின் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்.
இவர் உலகிலேயே அதிக சப்ஸ்கிரைபர்கள், அதாவது 300 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேனலாக உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் ருமானத்தை வைத்துப் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீடியோவுக்கு கீழ் ஒருவர் "மிஸ்டர் பீஸ்ட் ஃபார் அதிபர்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
அந்த கமெண்டுக்கு சுமார் 2.42 லட்சம் பேர் லைக் வந்திருந்தது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிபர் தேர்தலில் போட்டியிடும் வயதைக் குறைத்தால் நானும் களத்தில் குதிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிட ஒருவருக்குக் குறைந்தபட்சம் 35 வயதாகி இருக்க வேண்டும்.
பிரபல யூடியூபர்
இதன் காரணமாகவே 26 வயதே ஆன மிஸ்டர் பீஸ்ட் விரும்பினாலும் இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் அதிபர் ரேஸில் களமிறங்க இன்னும் 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அமெரிக்க வரலாற்றில் இளம் வயது அதிபர் என்ற பெருமை தியோடர் ரூஸ்வெல்ட் என்பவரிடம் தான் உள்ளது.
அவர் அதிபராகும் போது அவருக்கு வயது வெறும் 42 ஆகும். அங்கு ஒருவர் அதிபராக வேண்டும் எனில் அவருக்கு பல கண்டிஷன்கள் உள்ளது. அதாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அமெரிக்கக் குடியுரிமை வைத்திருக்க வேண்டும். அவர் நிச்சயம் அமெரிக்காவில் பிறந்து இருக்க வேண்டும்.
அதேபோல கடைசி 14 ஆண்டுகள் அவர்கள் அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயதாகியிருக்க வேண்டும். இதில் மற்ற கண்டிஷன்களில் மிஸ்டர் மீஸ்ட் பாஸ் ஆனாலும், வயது மட்டும் அவருக்குச் சிக்கலாகவே இருக்கிறது.