அதிபர் தேர்தலில் AI வேட்பாளர்; வெற்றி வாய்ப்பு அதிகம் - களமிறக்கும் எலான் மஸ்க்!
2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் AI வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
AI வேட்பாளர்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் ஆவார். எதிர் காலத்தில் தொழில்நுட்பங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்வதில் அதிக விருப்பம் கொண்ட அவர் அதன்படி வெளியிடும் ஓர் சில கணிப்புகள் பலிப்பது உண்டு.
அந்த வகையில், 2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ’ஏஐ வேட்பாளர்’ களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. அப்படியாக அமெரிக்காவின் தேர்தலும் இந்த வருடம் நடைபெற உள்ளது.
இதில், தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார். அப்போது அவரிடம் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
வெற்றி வாய்ப்பு
அதற்கு பதிலளித்த அவர், தேர்தல்களில் ஏஐ நுட்பங்களின் தலையீடு குறித்து எச்சரித்து இருந்தார். ஏஐ நுட்பங்கள் மேலும் ஸ்மார்ட்டாக இருப்பின், அவற்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரிடவும் கூடும்.
ஏஐ என்பதன் அடுத்தக்கட்டமான ஏஜிஐ (ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இண்டலிஜென்ஸ்) அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மனிதர்களை விட நுட்பமாகவும் ஸ்மார்ட்டாகவும் செயல்படத் தொடங்கிவிடும் என்றார்.
அதற்கான பாதையில் தற்போது அவரது நிறுவனங்கள் சாட்ஜிபிடிக்கு போட்டியான எக்ஸ்ஏஎஐ க்ராக் 2 என்பதை பரிசோதித்து வருகின்றன. ஆனால் சிப் தட்டுப்பாடு காரணமாக அவை முழு வடிவில் உருவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் சூடுபிடித்து வரும் சூழலில் அவற்றில் ஏஐ நுட்பம் வாயிலாக வேண்டாத சக்திகள் குழப்பம் உருவாகும். இந்த ஏஐ தலையீட்டுக்கு பிறகு தேர்தலில் நேரடி வேட்பாளராகவும் களமிறங்கும் என்றும் போட்டியிட்டு வெல்லவும் வாய்ப்புண்டு எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.