அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ரோசப்பட்டு வெளியேறுவாரா? சு. வெங்கடேசன் காட்டம்

M K Stalin Tamil nadu R. N. Ravi
By Sumathi Jan 10, 2023 05:26 AM GMT
Report

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு ஆளுநர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் சர்ச்சை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை கூட்டம் முடிவதற்கு முன்பாகவே பேரவையிலிருந்து வெளியேறினார். அந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , "ஆளுநர் அழைப்பிதழ் கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது.

அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ரோசப்பட்டு வெளியேறுவாரா? சு. வெங்கடேசன் காட்டம் | Mp Su Venkatesan Tweet About Governor Rn Ravi

இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.

 சு. வெங்கடேசன் காட்டம்

இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? " என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு பதிவில், ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது.

நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.