ஆர்எஸ்எஸ் முகம் அம்பலம்; ஆளுநர் மாளிகை முற்றுகை - விசிக அறிவிப்பு!
ஜனவரி 13ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக விசிக அறிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை
அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில் ஆளுநர் திடீரென சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. அதன் படி, விடுதலைச்சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
விசிக அறிவிப்பு
தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.