மஹூவா மொய்த்ராவுடன் நெருக்கம் - வைரலாகும் ஃபோட்டோக்கு எம்.பி சசிதரூர் பதிலடி!
மஹூவா மொய்த்ராவுடன் இருக்குமாறு பரவும் புகைபப்டத்திற்கு சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.
மஹூவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காகப் பிரபல தொழிலதிபரிடம் மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக கடந்த வாரம் பாஜக தனது குற்றச்சாட்டை முன்வைத்தது.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.
சசி தரூர் விளக்கம்
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூருடன் மஹுவா மொய்த்ரா மது கிண்ணத்துடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சசிதரூர்,
``இது மிகவும் கீழ்த்தரமான அரசியல். அன்று அந்தக் குழந்தையின் (மஹுவா மொய்த்ரா) பிறந்தநாள் பார்ட்டி. அவரை குழந்தை என்று அழைக்க முடியாது. ஆனால், எனக்கு அவர் குழந்தை மாதிரிதான். என்னைவிட 10-லிருந்து 20 வயது அவர் இளையவர். அன்று 15 பேர் அங்கு இருந்தனர். என்னுடைய சகோதரியும் அழைக்கப்பட்டிருந்தார்.
அவரும் அங்குதான் இருந்தார். ஆனாலும், சிலர் அந்தப் புகைப்படங்களை வேண்டுமென்றே கத்தரித்து, அதனை ரகசிய சந்திப்பு என்று திரிக்கின்றனர். இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், ரகசிய சந்திப்பாக இருந்தால் அந்தப் புகைப்படங்களை யார் எடுத்திருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
இதுபோன்ற ட்ரோல்களுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட நான் கொடுக்கவில்லை. இதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். மக்களுக்காகப் பணியாற்றுவதே எங்களின் முதல் வேலை" எனத் தெரிவித்துள்ளார்.

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
