புடவையில் ஃபுட்பால்... களத்தில் இறங்கி கவனம் ஈர்த்த எம்.பி மஹூவா மொய்தரா!

All India Trinamool Congress West Bengal Viral Photos
By Sumathi Sep 20, 2022 08:30 AM GMT
Report

எம்பி மஹூவா மொய்த்ரா புடவை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எம்பி மஹூவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா. தைரியமான அதிரடி பேச்சுக்களுக்கும் கருத்துக்களுக்கும் பெயர் போனவர்.

புடவையில் ஃபுட்பால்... களத்தில் இறங்கி கவனம் ஈர்த்த எம்.பி மஹூவா மொய்தரா! | Tmc Mp Mahua Moitra Plays Football Wearing Saree

தனது தொகுதியில் நடைபெற்ற ‘கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை’ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றபோது களத்தில் இறங்கி விளையாடி உள்ளார். அந்தப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். புடவையை கட்டிக்கொண்டு,

ஃபுட்பால் -  வைரல்

கண்ணில் கூலிங்கிளாஸ் மற்றும் காலில் ஷூ மாட்டிக்கொண்டு விளையாடி உள்ளார். பந்தை அடித்து ஆடும் அட்டேக்கர் ஆகவும், தடுத்து ஆடும் கோல் கீப்பராகவும் அவர் விளையாடி உள்ளார்.

“கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை தொடரின் வேடிக்கையான தருணம். ஆம், நான் புடவையை கட்டிக் கொண்டு விளையாடினேன்” என அதற்கு விளக்கமும் அவர் கொடுத்துள்ளார். அதுதான் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.