பிரபல இயக்குனரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த ஓபிஎஸ் மகன் - உண்மை உடைத்த பெண்!
ஓபிஎஸ்-இன் மகன் பிரபல இயக்குனரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பேட்டி
சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் மகனான ரவீந்திரநாத் குறித்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
அதில் பேசிய அவர், "எம்பி ரவீந்திரநாத் எங்களுக்கு குடும்ப நண்பர், கொடைக்கானலில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே தெரியும். 10 வருடங்களாக அவர் நல்ல குடும்ப நண்பர். அவரது மனைவி ஆனந்தியும் நன்றாகவே தெரியும் எந்த குடும்ப விஷயமாக இருந்தாலும் பகிந்து கொள்வதுண்டு" என்று கூறினார்.
இயக்குனரின் மனைவி
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், " இயக்குனர் பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்தர்நாத்துக்கும் - மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது.
ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபாஷன் செய்வது போல், மருத்துவமனையில் இருந்து கொண்டு நடித்தது மட்டும் இன்றி, என்னையும் அவருக்கு ஆதரவாக, ரவீந்தர்நாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு அவர் மேல் இருந்த, மரியாதை போய் விட்டது.
இனி உன்னுடைய நட்பே வேண்டாம் என மலரிடம் இருந்து விலகி விட்டேன். இதுகுறித்து அவரிடம் கூறினேன், அதன்பிறகு அவர் எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். குடித்துவிட்டு போதையில் போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளார்" என்று அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.