அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு- ராகுல் பதிலால் அதிர்ந்த நீதிபதி!

Indian National Congress Amit Shah BJP
By Vidhya Senthil Jul 26, 2024 09:58 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

ராகுல் காந்தி தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா:

பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.2018, ஆகஸ்ட் 4-ம் தேதி பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாக கூறி அக்கட்சியை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு- ராகுல் பதிலால் அதிர்ந்த நீதிபதி! | Mp Rahul Gandhi To Appear Sultanpur Court Today

இந்த வழக்கு மீதான தனது கருத்தை பதிவு செய்ய ராகுல் காந்தி ஜூலை 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிபதி சுபம் வெர்மா உத்தரவிட்டு இருந்தார். நீதிபதியின் உத்தரவை ஏற்று இன்று உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி தனது கருத்தை பதிவு செய்தார்.

பிரதமர் பிழைத்தார்; என் சகோதரி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால்.. - ராகுல் காந்தி எச்சரிக்கை!

பிரதமர் பிழைத்தார்; என் சகோதரி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால்.. - ராகுல் காந்தி எச்சரிக்கை!

சுல்தான்பூர் நீதிமன்றம்:

அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த விஜய் மிஸ்ராவின் வழக்கறிஞர்,'' தன் மீதான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்தார். அரசியல் காரணங்களுக்காகவும், ராகுல் காந்தி தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.

அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு- ராகுல் பதிலால் அதிர்ந்த நீதிபதி! | Mp Rahul Gandhi To Appear Sultanpur Court Today

மேலும், நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவரது பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனி, நாங்கள் அவர் அவதூறாகப் பேசியதற்கான ஆதாரங்கள் குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 12ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்” என கூறினார்.