கல்யாணம் பண்ணிப்போமா.. நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்பி!

Australia
By Sumathi Mar 09, 2023 07:39 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் தனது காதலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஓர் காதல்

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி நாதன் லாம்பர்ட். இவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில்,

கல்யாணம் பண்ணிப்போமா.. நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்பி! | Mp Nathan Lambert Proposes To Partner Parliament

தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை, பிறகு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட அவையில் இருந்த உறுப்பினர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அவரது காதலை ஏற்று நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.