ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறையுங்கள் : பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

BJP
By Irumporai Jan 16, 2023 11:20 AM GMT
Report

உங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அறைந்தால் திருப்பி அறைந்தால் என பாஜக பின் எம்பி ஒருவர் கூறியுள்ளது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பி அறையுங்கள்

பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அறைந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து பாஜக பெண் எம்பி லாக்கட் சாட்டர்ஜி என்பவர் பேசினார். உங்களை யாராவது அறைந்தால் உங்களது குறைகளை கேட்க அவர் விரும்பவில்லை என்றும் அந்த நபரை ஒரு மரத்தில் கட்டி வைத்து திரும்ப அறையுங்கள் என்று பேசியுள்ளார் இது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் திருப்பி அறையுங்கள் : பாஜக எம்பி சர்ச்சை பேச்சு | Bjp Mp Controversy Speech

 மேற்கு வங்கத்தில் பரபரப்பு

குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் அதே மாநிலத்தில் உள்ள பெண் எம்பி இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது