50 வயதில், 65 வயது எம்பியை மணந்த மஹூவா மொய்த்ரா எம்பி - யார் தெரியுமா?

All India Trinamool Congress Marriage West Bengal Viral Photos Odisha
By Sumathi Jun 06, 2025 04:55 AM GMT
Report

பினாகி மிஸ்ரா, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 மஹூவா மொய்த்ரா

2019-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. பின்னர் அவர் 2024-ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

50 வயதில், 65 வயது எம்பியை மணந்த மஹூவா மொய்த்ரா எம்பி - யார் தெரியுமா? | Mp Mahua Moitra Marries Former Mp Germany

நாடாளுமன்றத்தில் தனது அனல் பறக்கும் உரைகளுக்கு பெயர் பெற்றவர். எம்.பி.யாக இருந்த அவர் 2023-ம் ஆண்டில் கேள்விக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டுகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பஹல்காமில் கணவரை இழந்த பெண்களிடம் வீரம் இல்லை - பாஜக எம்.பியின் பேச்சால் சர்ச்சை

பஹல்காமில் கணவரை இழந்த பெண்களிடம் வீரம் இல்லை - பாஜக எம்.பியின் பேச்சால் சர்ச்சை

திருமண க்ளிக்

50 வயதான இவர், ஒடிசாவின் பூரி தொகுதியின் முன்னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்துள்ளார். இருவரும் திருமண உடையுடன் கைகோத்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பினாகி மிஸ்ரா, ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர்.

mp mahua moitra wedding click

1996-ல் பூரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2009, 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பூரி தொகுதியில் தொடர்ந்து வென்றார்.

1984-ல் சங்கீதா மிஸ்ராவை மணந்தார், ஆனால், பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.