மூன்று வேளையும் சட்னி சாப்பிட முடியுமா? கொந்தளித்த கனிமொழி எம்.பி

Smt M. K. Kanimozhi Narendra Modi Petrol diesel price
By Sumathi Aug 02, 2022 04:07 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய திமுக எம்.பி கனிமொழி, 3 வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

விலைவாசி உயர்வு 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

மூன்று வேளையும் சட்னி சாப்பிட முடியுமா? கொந்தளித்த கனிமொழி எம்.பி | Mp Kanimozhis Speech In Lok Sabha About Price Hike

இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ”விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது.

 எம்.பி கனிமொழி

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கத்தேவையில்லை. மத்தியஅமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார்.

மூன்று வேளையும் சட்டினியை மட்டும் அறைத்து சாப்பிட முடியுமா? ”என கேள்வி எழுப்பினார்