கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மக்களவையில் பரபரப்பு!
திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் திடீரென அவைக்குள் நுழைந்து வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் எனவும்,
எம்.பிக்கள் சஸ்பெண்ட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால், கூட்டம் தொடங்கியதும் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. அதனையடுத்து, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.
இந்நிலையில், மக்களவையில் சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, எம்.பிகள் கனிமொழி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், சுப்பராயன் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 15 பேர் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.