பாராளுமன்ற வக்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - குத்தி கிழித்த கண்ணாடி; கையில் ரத்தம் வழிய வந்த எம்.பி
வக்பு வாரிய கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தில் திரிணாமுல் எம்பியின் கையில் ரத்தம் வழிந்துள்ளது.
வக்பு வாரிய மசோதா
கடந்த மாதம், வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கையில் வடித்த ரத்தம்
இதன்படி நாடாளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜிக்கும், பாஜக எம்பி கங்கோபாத்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி, தான் வைத்திருந்த கண்ணாடிக் குவளையை மேஜையில் வீசியதில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் அவரின் வலது கையை கிழித்து ரத்தம் வடிந்துள்ளது.
वक्फ बिल की JPC बैठक में हंगामा
— News1India (@News1IndiaTweet) October 22, 2024
JPC बैठक में TMC सांसद कल्याण बनर्जी ने टेबल पर पटकी बोतल
TMC सांसद कल्याण बनर्जी के हाथ में लगी चोट
चोट के बाद ओवैसी उनका हाथ पकड़कर ला रहे हैं #WaqfAmendmentBill2024 #TMC #Waqf #kalyanbanerjee pic.twitter.com/TMyxDlaCkg
உடனிருந்த ஓவைசி, சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அடுத்த கூட்ட அமர்வில் கல்யாண் பானர்ஜி கலந்து கொள்ள குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தடை விதித்துள்ளார்.