ராகுல்காந்தி, பிரியங்கா பற்றி ஆபாச பதிவு.. பாஜகவின் அறுவெறுப்பு அரசியல் - விளாசிய எம்.பி. ஜோதிமணி!

Indian National Congress Rahul Gandhi BJP
By Vinothini Oct 01, 2023 10:50 AM GMT
Report

பாஜகவினர் காங்கிரஸ் கட்சியினர் குறித்து ஆபாசமாக பதிவிட்டது குறித்து எம்.பி ஜோதிமணி டுவீட் செய்துள்ளார்.

ஆபாச பதிவு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ், சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து அவதூறாக பதிவிட்டார். இதுகுறித்து, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்படி இன்று அதிகாலை 2 மணியளவில் பிரவீன் ராஜை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

mp-jothimani-reply-to-bjp-executive-arrest

இது குறித்து தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வ குமார், "தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் அன்பு தம்பி பிரவீன் ராஜை கைது செய்துள்ளது காவல் துறை, இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் கைது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது.

கரூர் மக்களுக்கு இதுவரை உருப்படியாக எதுவும் செய்யாத கரூர் எம்.பி ஜோதிமணி, காங்கிரஸை விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக கரூர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து பிரவீன் ராஜை கைது செய்ய வைத்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

எதற்கு பிளாக் பண்ணீங்க?.. என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை - சீமானை எதிர்க்கும் வெற்றிக்குமரன்!

எதற்கு பிளாக் பண்ணீங்க?.. என்னை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை - சீமானை எதிர்க்கும் வெற்றிக்குமரன்!

ஜோதிமணி

இந்நிலையில், எம்.பி ஜோதிமணி, "கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசியல் ரீதியாக , கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம்.

ஆனால் ஒரு அண்ணன், தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் ஆபாச, வெறுப்பு அரசியல் தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம்.

இன்று பிரியங்கா காந்தி நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக, அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிராது.

இனிமேலாவது பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்று எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.