Thursday, May 8, 2025

ஆணவத்தில் அண்ணாமலை.. முடிஞ்சா அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பட்டும் - விளாசிய எம்.பி!

Indian National Congress BJP K. Annamalai
By Vinothini a year ago
Report

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அண்ணாமலை குறித்து பேசியுள்ளார்.

ஜோதிமணி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார் 'பெண் என்பதால் பிழைச்சிப்போ என விட்டிருக்கிறேன்' என சொல்கிறார். இதை சொல்வதற்கு அண்ணாமலை யார்? மக்களிடம் கொள்ளை அடித்து தமிழ்நாட்டில் வசூல் ராஜாவாகி, பணம் சம்பாதித்து வைத்திருக்கும் திமிர்;

mp-jothimani-reply-to-annamalai

மத்திய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆணவம் தான் அண்ணாமலையை இப்படி பேச வைக்கிறது. அண்ணாமலையால் என்னை என்ன பண்ண முடியும்.

அதிகபட்சம் அண்ணாமலை கையிலும், பிரதமர் மோடி கையிலும் உள்ள அமலாக்கத்துறை எனும் வேட்டை நாய்களைத்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்ற எல்லா மாநிலங்களிலும் ஏவிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.பி ஜோதிமணிக்கு உள்ள தொடர்பு.. பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் - அண்ணாமலை காட்டம்!

எம்.பி ஜோதிமணிக்கு உள்ள தொடர்பு.. பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் - அண்ணாமலை காட்டம்!

அமலாக்கத்துறை

இதனை தொடர்ந்து, "அண்ணாமலை முடிந்தால் அந்த அமலாக்கத்துறையை எங்கள் வீட்டுக்கு அனுப்பட்டும். அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர எடுப்பதற்கு ஒன்றும் கிடையாது. அண்ணாமலை மணல் மாஃபியாக்களிடம் மாதம் 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். வீட்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வாடகை என்று சொன்னார்கள்.

mp-jothimani-reply-to-annamalai

அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை. அண்ணாமலையின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகின்ற ஆள் நான் கிடையாது. நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளைச்ச காளான் கிடையாது.

அரசியலில் நேர்மையுடன் உறுதியோடும், நெஞ்சுரத்தோடும் இருந்து அரசியல் உலகில் வெற்றிபெற்ற பெண்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் மீது தனி நபர் தாக்குதல் நடத்துகின்ற கழிசடை அரசியல்வாதி தான் அண்ணாமலை" என்று கூறியுள்ளார்.