விஜயதரணி சொன்னது உண்மை தான் - பெண்களுக்கு அரசியல்...!
உடைத்து பேசிய ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி பாஜகவிற்கு சென்றுள்ளது தமிழக அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு..
கட்சி மாறிய பின் பேசிய விஜயதரணி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு அவசியம் என்றும் பாஜகவில் இணைந்த பின் விஜயதரணி தெரிவித்திருந்தார்.
இது அவர் மறைமுகமாக கட்சியை விமர்சிக்கும் விதத்தில் தான் கூறியிருக்கின்றார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆனால், அவரின் கருத்திற்கு சற்று ஒற்றுப்போகும் படி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கவனத்தை பெற்றுள்ளன.
ஜோதிமணி கருத்து
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது.பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
— Jothimani (@jothims) February 24, 2024
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை…