8 மணி நேரத்திற்கு மேல் சிஸ்டம் வேலை செய்யாது - எச்சரிக்கும் ஐடி கம்பெனி

Madhya Pradesh
By Sumathi Feb 16, 2023 11:32 AM GMT
Report

ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்கள் 8மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யாமல் இருக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐடி நிறுவனம்

மத்தியப்பிரதேசத்தில் சாஃப்ட் கிரிட் கம்ப்யூட்டர்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், தங்கள் ஊழியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

8 மணி நேரத்திற்கு மேல் சிஸ்டம் வேலை செய்யாது - எச்சரிக்கும் ஐடி கம்பெனி | Mp It Company Turns Off Computer 8 Hours Work

என்னவென்றால் 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதில்லை. அவ்வாறு 8 மணி நேரத்திற்கு மேல் பணி புரிந்தால் கணினி திரையில் அவர்களை கனிவுடன் எச்சரிக்கும் மெசேஜ் தோன்றும். இதுகுறித்து அந்த நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி தனது பதிவில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் அணுகலாம்.

புதிய அம்சம்

இது கற்பனைப் பதிவு இல்லை. உண்மைதான். இதுதான் எங்கள் அலுவலகத்தின் தன்மை, வாழ்க்கையும் பணியும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் பணிநேரம் முடிந்ததும் அவர்களை வீட்டுக்குப் புறப்பட நினைவூட்டுகிறோம்.

பணி நேரத்துக்குப் பிறகு அழைப்புகள் இல்லை. மின்னஞ்சல்கள் இல்லை. இந்த சூழலில் பணிபுரிந்தால் மன அழுத்தத்தைக் குறைக்க எந்தவொரு மண்டே மோடிவேஷனலும், ஃபன் ஃப்ரைடேவும் தேவைப்படாது. இந்த காலத்திலும் நாங்கள் அளவான நேரம் வேலை பார்ப்பதை நம்புகிறோம். மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறோம் என்ப் பதிவிட்டுள்ளார்.