தந்தையை தெருவில் வைத்து சரமாரியாக அடித்த மகன் - அதிர்ச்சி காரணம்!
தந்தையை தெருவில் வைத்து மகன் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி ஊழியர்
ராஜஸ்தான், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷன்குமார்(40). ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது தாய் சமீபத்தில்தான் இறந்துள்ளார்.
அதனால் தந்தை தாமோதர் பிரசாத்தும்(75) இவருடன் தங்கியுள்ளார். ஆனால் மகனுக்கு தந்தையை தனது வீட்டில் தங்க வைப்பதில் விருப்பமில்லை. எனவே அவர் உடல்நலம் சரியில்லாத போதிலும், அவரை தன்னுடன் அழைத்து வராமல் இருந்தார்.
தந்தையுடன் தகராறு
அதன்பின் அவரது உறவினர்களின் கட்டாயத்தின் பேரில் தந்தையை உடன் கூட்டி வந்துள்ளார். ஆனாலும் தன்னுடன் வீட்டில் தங்க வைக்காமல் அருகில், அவுட் ஹவுஸில் தங்க வைத்துள்ளார். அவருக்கு தேவையான உணவுகள், சரியான நேரத்தில் அங்கேயே வந்துவிடும்.
எனவே அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என கூறி வைத்திருந்திருக்கிறார். ஆனால், பேரக்குழந்தைகளை பார்க்கும் ஆசையில் கிஷன் குமார் இல்லாத நேரத்தில் தாமோதர் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இதை அறிந்த மகன் கண்டித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் மறுபடியும் பேரக்குழந்தைகளை பார்க்க வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அவரது மருமகள், தனது கனவரிடம் தெரிவித்துள்ளார். இதில் கோவமடைந்த கிஷன் குமார் தனது தந்தை தாமோதரை அவுட் ஹவுசில் இருந்து வீதிக்கு இழுத்து வந்தார்.
பின்னர் அனைவரின் முன்னிலையிலும் தனது தந்தையை அங்கிருந்த கம்பை எடுத்து சரமாரியாக அடித்தார். இதில் வலி தாங்க முடியாமல் முதியவர் தாமோதர் கதறியுள்ளார். அதனையடுத்து அங்கு வந்த மக்கள் மக்கள், கிஷன் குமாரிடம் இருந்து தாமோதரை மீட்டு, போலீஸில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், கிஷன் குமாரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.