மத்திய பிரதேசத்தில் முழு பெருபான்மை - எல்லாம் பிரதமரின் ஆசி - சிவராஜ் சிங் சவுகான்!!

BJP Narendra Modi Madhya Pradesh
By Karthick Dec 03, 2023 06:14 AM GMT
Report

நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் முழு பெருமான்மைக்கு தேவையான இடங்களுக்கு அதிகமாகவே பாஜக முன்னிலை வகிக்கிறது.

மத்திய பிரதேச அரசியல்

வடஇந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். இம்மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றிய நிலையிலும் மெஜாரிட்டி இல்லாத காரணத்தால், சமாஜ்வாதி கட்சியின் 1 MLA, பகுஜன் சமாஜ் கட்சியின் 2 MLA'க்கள் மற்றும் 4 சுயேச்சை MLA ஆகியோரின் ஆதரவை காங்கிரஸ் கோரியது.

mp-election-its-modi-blessing-bjp-winning-shivraj

அதனை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் டிசம்பர் 17 2018 அன்று பதவியேற்றார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் 22 சிட்டிங் MLA'க்கள் ராஜினாமா செய்த பிறகு, கமல்நாத் மார்ச் 20, 2020 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தெலுங்கானா தேர்தல் பரபரப்பு..!! MLA'க்களை பாதுகாக்க களமிறங்கிய கர்நாடக துணை முதல்வர்!!

தெலுங்கானா தேர்தல் பரபரப்பு..!! MLA'க்களை பாதுகாக்க களமிறங்கிய கர்நாடக துணை முதல்வர்!!

அதனை தொடர்ந்து, பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23, 2020 அன்று மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆட்சியில் அமர்ந்த போதும், MLA'க்கள் கட்சி மாறியதால் அதனை பறிகொடுத்த காங்கிரஸ் 2023-ஆம் ஆண்டின் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தது.

முன்னிலையில் பாஜக

ஆனால், அந்த நம்பிக்கை தற்போது உடைந்துள்ளது. மொத்தமுள்ள 230 இடங்களில் மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை. அதனை கடந்து பாஜக 150 இடங்களில் தனி பெரும் மெஜாரிட்டி வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

mp-election-its-modi-blessing-bjp-winning-shivraj

கிட்டத்தட்ட ஆட்சி முடிவான நிலையில், இது குறித்து பேசிய அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நான் கூறியிருந்தேன் என்பதை குறிப்பிட்டு நாங்கள் அதைப் பெறுகிறோம் என தெரிவித்துள்ளார்.

mp-election-its-modi-blessing-bjp-winning-shivraj

பிரதமரின் ஆசி மேலும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சவுகான், "அவர் இங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி, மக்களை கவர்ந்தார் என்றும் அது மக்களின் இதயங்களைத் தொட்டது என குறிப்பிட்டு, இந்த முன்னிலை விவகாரங்கள் அதன் விளைவாகும் என தெரிவித்தார்.

mp-election-its-modi-blessing-bjp-winning-shivraj

இரட்டை என்ஜின் அரசு மத்திய அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்தியது என சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தில் உருவாக்கப்பட்ட அரசும் திட்டங்களும் மக்களின் இதயங்களைத் தொட்டன என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் தளத்தில் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.