தெலுங்கானா தேர்தல் பரபரப்பு..!! MLA'க்களை பாதுகாக்க களமிறங்கிய கர்நாடக துணை முதல்வர்!!

Telangana Election
By Karthick Dec 03, 2023 05:20 AM GMT
Report

இன்று தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

தேர்தல் முடிவுகள்

4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவை சேர்ந்த தெலுங்கானா மாநிலத்திலுள்ள 119 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன.

dk-shivakumar-arranges-for-hotels-to-stop-mla-move

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 65, பி.ஆர்.எஸ் 40, பாஜக 7, பிற 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இம்மாநிலத்தில் பெருபான்மைக்கு தேவையான 60 இடங்களை காங்கிரஸ் கட்சி தாண்டியுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

டி கே சிவகுமார் மும்முரம்

இந்நிலையில், தான் வெற்றிபெறும் MLA'க்கள் கட்சி தவுவதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மும்முரம் காட்டி வருகின்றார். டி.கே.சிவகுமாரை தெலங்கானாவுக்கு செல்லுமாறு அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

dk-shivakumar-arranges-for-hotels-to-stop-mla-move

அதே போலதேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுப்பதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்க வைக்க பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் சொகுசு விடுதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின.