அடக்கம் செய்வதில் போட்டி..தந்தையின் உடலை இரண்டாக பிரிக்க நினைத்த கொடூரம் - பகீர் தகவல்!
தந்தையின் உடலை சகோதரர்கள் இரண்டாக பிரிக்க நினைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் திகாம்கர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 84 வயதான தியானி சிங். இவருக்கு கிஷான் மற்றும் தேஷ்ராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தியானி சிங் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார்.வயது மூப்பு காரணமாக நீண்டகால நோயால் அவதிப்பட்டு வந்த தியானி சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த நிலையில் இறந்த தந்தையை யார் அடக்கம் செய்வது என்ற தகராறு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டது.அப்போது கிஷன் தனது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனி சடங்குகள் செய்யுமாறு கூறியுள்ளார்.இது திரண்டிருந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சகோதரர்கள்
மேலும் நிலைமை மோசமாகிவிடுமோ என்ற அச்சத்தில் இந்த சம்பவம், தொடர்பாக ஜதாரா காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிஷான் மற்றும் தேஷ்ராஜ் ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மூத்த மகன் கிஷான் தந்தையின் உடலை 2 பாதியாக வெட்டி, ஒரு பாதியை தனக்கும், மற்றொரு பாதியைத் தம்பிக்கும் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் இளைய மகனுக்கு அடக்கம் செய்யும் உரிமையை அளித்தனர்.