குழந்தைகள் கண்முன்னே..பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய் - கடைசியில் நடந்த பயங்கரம்!
பெற்ற குழந்தைகள் முன்பே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம்
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் 30 வயதான பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு வெளியில் சென்றுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசித்துவரும் சாரதி (28) என்பவர், வீட்டிற்குப் புகுந்து அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணின் கை மற்றும் கால்களைக் கட்டி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று குழந்தைகள் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அந்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய கணவன், மனைவியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியை மீட்டு சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பாலியல் வன்கொடுமை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக்க மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளி சாரதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.