எல்லாருக்கும் வைர நெக்லஸ்; மகளிர் அணிக்கு கிப்ட் கொடுக்கும் எம்பி - யார் இவர்?
இந்திய மகளிர் அணியின் அனைவருக்கும் வைர நெக்லஸ் பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைர நெக்லஸ்
மகளிருக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத், சூரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ராஜ்யசபா எம்பியுமான கோவிந்த் டோலகியா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பரிசு அறிவித்துள்ளார். இவர் வைரம் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
எம்பி அறிவிப்பு
இதுபற்றி அவர் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லாவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‛‛உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் அணி உலகக்கோப்பை பைனலில் வென்று கோப்பையை கைப்பற்றினால் அணியில் உள்ள அனைவருக்கு வைர நெக்லஸ் வழங்குவேன்.

அதேபோல் அவர்களின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைத்து கொடுப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் ரூ.11 கோடியை அவர் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.