அவ்வளவு ரணகளத்துலயும்.. கொரோனாவுக்கு நடுவே Lip kiss ட்ரெண்டிங்!
உதட்டு முத்த டிரெண்டிங் ஒன்று கொரோனாவை விட அதிகமாக பரவி வருகிறது.
முத்த டிரெண்டிங்
'Mouth Buddies' எனும் நவீன டேட்டிங் நடைமுறை தற்போது சீனாவில் திடீரென தோன்றியுள்ளது. இதில், அறிமுக இல்லாத இருவர் தங்களுக்குள் 'முத்தம்' கொடுக்கிறார்கள். ஆனால் காதலில் விழக்கூடாது. அதுமட்டுமில்லாமல், யார் என்றே தெரியாத அந்த

நபரை ஒருமுறை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் இரண்டாம் முறை டேட்டிங் செல்லக்கூடாது எனவும் விதிமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாதான் தீவிரமாக இந்த ட்ரெண்டை கடைபிடித்து வருகிறது. இதுகுறித்து சீன பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறுகையில்,
ரொம்ப முக்கியம் தான்...
"எனக்கு தெரிந்த பலரும் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துவிட்டு, காதலிக்காமல் இருந்துள்ளனர். எனவே, முத்தம் என்பது மிகவும் பொதுவானது. அது பெரிய விஷயமல்ல என்கிறார். மேலும், ஒருவர் நிகழ்காலத்தை கொண்டாடுவதுதான் வாழ்க்கையில் மிக முக்கியமானது.
ஒருவரை முத்தமிடும்போது, நான் காதலிப்பவரை முத்தமிடுவதை போன்ற எண்ணம் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாணவி ஒருவர், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், இந்த டிரெண்டை நான் முயற்சித்து பார்த்தேன் எனக் கூறியுள்ளார். தற்போது இந்த ட்ரெண்டை பல நாடு ட்ரை செய்கிறது.